Followers

Friday, December 27, 2019

ஞானக் களஞ்சியம் - இறை வணக்கம்

இறை வணக்கம் 

ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,
அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி,
மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,
நீதிநெறி உணர் மாந்தராகி, வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,
         

வாழ்க வையகம்   வாழ்க  வளமுடன் 

Friday, May 10, 2019

அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சி

அருட்தந்தை வேதாத்திரி  மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சி 


உயிரையும், உயிரைப்பற்றிய மறைபொருளான நுட்பங்களையும் அறிந்து விளக்கக்கூடிய கல்வி. வேதாத்திரி மகரிஷி அனுபவத்தில் பயனாய்க் கண்ட விளைவுகளை உலகெங்கும் உள்ள மக்கள் வாழ்வில் நற்பயன் விளைவிக்க வேண்டி காயகல்பக் கலை என்ற பெருநிதியை வேண்டுவோருக்கு வெளிப்படையாக அறிவித்தும், பயிற்சி அளித்தும் வருகிறார்.

மாணவர்கள்,  ஆசிரியர்கள்,  விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள்,  மருத்துவர்கள்,  இளமை நோன்பு காக்கும் ஆண், பெண் அனைவருக்கும், இல்லறத்தார்க்கும் பெரு நன்மை பயக்கத்தக்கது. மனிதகுல வாழ்க்கையில் நிலவி வரும் பெரும்பாலான சிக்கல்களை தீர்க்கவல்லது இந்த காயகல்ப பயிற்சி முறை ஆகும்.

இப்பயிற்சி பெறுவோர் அருளும், பொருளும் ஒருங்கேபெற்று உடல்நலம், மனவளம், அறிவுநலம் ஓங்கிச் சிறப்பாக வாழ்வீர்களாக.

வாழ்க வளமுடன்!

உலக நலத் தொண்டன்,
வேதாத்திரி 

Saturday, April 13, 2019

அகத்தவ பயன்கள் - உள்ளுணர்வின் நிலைகள்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் - நீதி நெறி உணர் மாந்தாராகி வாழும் நிலையுணர்ந்து தெராண்டாற்றி இன்பம்  காண்போம் - அகத்தவ பயன்கள் - உள்ளுணர்வின் நிலைகள் -  அறிவதனைக் கருவினிலே இணைத்துத் தவம் ஆற்ற...

Friday, April 5, 2019

மனத்தின் இயக்கம்

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

மனத்தின்  இயக்கம் 

மனத்தின் அலை இயக்கம் தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களிலும் இயங்கி கொண்டேயிருக்கிறது. பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் அதன் இயக்கம் தொடர்ந்து நடை பெறுகிறது. மனத்தை நிறுத்தி விடவேண்டும் என்று நினைத்தால் அது அறியாமை. மனத்தை நிறுத்தி விடவேண்டும் என்று நினைப்பதை விட அதை நல்ல முறையிலே பழக்கி விடவேண்டும் என்று நினைக்கலாம். உதாரணமாக, மனம் அமைதியாக இருக்க வேண்டும், மனம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைக்கலாம்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கின் அசேதனம் என்று இட்டு
அஞ்சும்  அடக்கா அறிவறிந் தேனே.


மனம் துரியத்தில் செயல்படும் போது "நிலைபேற்று நிலை" என்றும், துரியாதீதத்தில் வருகிற போது "நிறைபேற்று நிலை"என்றும் சொல்கிறோம். துரியாதீதத்தில் மனம் நிறை நிலை அடையும். அந்த நிலையே தவத்தில் கடைசியாக அடைய வேண்டியது. நாம் அவ்வாறு தவத்தில் பழகி மனதை சாதாரண பொருளிலிருந்து உயிருக்கு கொண்டு வந்து, உயிரிலேயிருந்து பரத்துக்கு கொண்டு வந்து எல்லாமாக மாற்றி எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்க பழக வேண்டும். அது தான் தவம். யோகம் என்பதும் அதுவே.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !