வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
மனத்தின் இயக்கம்
மனத்தின் அலை இயக்கம் தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களிலும் இயங்கி கொண்டேயிருக்கிறது. பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் அதன் இயக்கம் தொடர்ந்து நடை பெறுகிறது. மனத்தை நிறுத்தி விடவேண்டும் என்று நினைத்தால் அது அறியாமை. மனத்தை நிறுத்தி விடவேண்டும் என்று நினைப்பதை விட அதை நல்ல முறையிலே பழக்கி விடவேண்டும் என்று நினைக்கலாம். உதாரணமாக, மனம் அமைதியாக இருக்க வேண்டும், மனம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைக்கலாம்.
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கின் அசேதனம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.
மனம் துரியத்தில் செயல்படும் போது "நிலைபேற்று நிலை" என்றும், துரியாதீதத்தில் வருகிற போது "நிறைபேற்று நிலை"என்றும் சொல்கிறோம். துரியாதீதத்தில் மனம் நிறை நிலை அடையும். அந்த நிலையே தவத்தில் கடைசியாக அடைய வேண்டியது. நாம் அவ்வாறு தவத்தில் பழகி மனதை சாதாரண பொருளிலிருந்து உயிருக்கு கொண்டு வந்து, உயிரிலேயிருந்து பரத்துக்கு கொண்டு வந்து எல்லாமாக மாற்றி எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்க பழக வேண்டும். அது தான் தவம். யோகம் என்பதும் அதுவே.
No comments:
Post a Comment