மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு மனம், உயிர், மெய் என்னும் மூன்று மறை பொருட்களை உணர வேண்டும். மறை பொருட்களை உணர்ந்த மனிதனின் அறிவு பிற உயிர்களை மதித்து அன்போடும், பண்போடும், கருணையோடும் சிறப்பாக வாழ வழி வகுக்கும். இறை நிலையை அடைவதே ஒவ்வொரு உயிரின் நோக்கமாக இருக்கிறது. இவ்வறிவை பெறுவதற்குரிய உயர்ந்த அறிவு மனிதப்பிறவிக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கையை பற்றியும், அதன் நோக்கத்தை பற்றியும், அந்நோக்கத்திற்கு ஏற்ப வாழும் முறை பற்றியும் அறிந்து கொள்வதே ஞானமாகும். புறக்கவர்ச்சியிலும், சூழ்நிலை கவர்ச்சியிலும் சிக்கும் போது பிறவியின் நோக்கம் மறந்து போகிறோம். நாம் மனது வைத்தால் மட்டுமே நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும். அறிவின் பயணத்திற்கு மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்க வேண்டும், பின்பு உயிரின் மூலமான இறை நிலையை அடைய வேண்டும். அப்பொழுது அவனே அறிவாக நிற்கிறான், அந்த அறிவை பெற்ற மனம் கொண்ட மனிதன் தரத்தில் தெய்வமாகிறான். நம் மனதிற்குள்ளே இன்பமும், அமைதியும் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து உனக்குள்ளாக உள்ளே சென்று உன்னை பார், அது தான் கடவுள். மனம் அறிவிலிருந்து வந்தது. மனம் அறிவை சந்திக்க வேண்டும். எல்லா இயற்கை ரகசியங்களையும் மனம் புரிந்துக் கொள்ள வேண்டும். மனத்தை அறிய அறிய அது பூரணமாகிறது. எல்லாம் சிவமயமாக தோன்றும். சிவம் என்றால் பூரணம், பேரறிவு, வற்றாயிருப்பு. உயிர் துகள்களில் ஆதியென்னும் ப்ரம்மம் அறிவாக ஒடுங்கியுள்ளது. நம் மனத்தை உயர்த்தி, தூய்மை செய்து, வலுப்படுத்தி, நெறிப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு மனிதனின் வெற்றி, மதிப்பு, வாழ்வு, வளங்கள் எல்லாம் அமையும். ஆன்மா லயமாவதே "ஆலயம்" எனப்படுகிறது. லயமென்றால் திருப்தி - ஆத்ம திருப்தி.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Thanks for your special information Vethathiri. I also have posted some very special information here, that you may be interested in:
ReplyDeletehttp://www.human-resonance.org
To summarize what you will find on my website, I am the reincarnation of Nikola Tesla, who is the reincarnation of Leonardo Da Vinci,... who is the reincarnation of Siddha Bokar. My work in this life is an open book, all can see for themselves the truth of my words... if only they look there!
I have an intuitive understanding of Bogar's works, but have very little access to his writings. I will be traveling to Tamil Nadu soon and would like to make connections there to facilitate this journey. Do you have any interest in aiding my research?
Blessings,
Alexander Putney