அழுத்தமெனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே,
அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கிவழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும் ஆறும்
வகைவகையாம் உயிரினங்கள் தோற்று வித்து,
முழுத்திறனுடன் காத்து, முடிக்கும் மேலாம்
பழுத்தநிலை வரும்வரையில் "நீ, நான்" என்போம்
முழுமுதற் பொருளே நம்மறிவாய் ஆற்றும்
பதமடைந்தோம்; ஒன்றானோம்; பரமானந்தம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க