Followers

Thursday, December 20, 2018

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?

முன்பு நாம் என்னென்ன காரியங்கள் செய்தோமோ, அதே போல் உடலிலே சக்தி ஏற்படும். அந்த சக்தியின் காரணமாக அதே எண்ணம், அதே செயல் உண்டாகின்றது. நாம் இப்பொழுது எண்ணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கு முறையான பயிற்சி அவசியமாகிறது. நம்முடைய மனத்தை  நம்முடைய விருப்பப்படி நடத்தி நாம் அடைய வேண்டிய எல்லாப் பேறுகளையும் எல்லா இலட்சியங்களையும் வாழ்க்கையிலே அடைய முடியும். அதற்குரிய  பயிற்சியை தான் யோகம் என்றும் அகத்தவம் என்றும் லயம் என்றும் சொல்லுவார்கள்.

அந்த மனப்பயிற்சியை பழைய யோக நூல்களிலே நான்கு விதமாக கொடுத்திருக்கிறார்கள். அந்த நான்கு விதமான பயிற்சிகள் பிரத்தியாகாரா, தாரணா, தியானம், சமாதி எனப்படுகின்றன.

பிரத்தியாகாரா:

'பிரத்தியாகாரா' என்றால் இதுவரையிலே என்னென்ன காரியங்கள் செய்தோமோ, அதன் வழியே மனம் ஓடிக் கொண்டு இருக்கின்றதே, அதை முதலில் அதன் வழியே ஓடாமல் திருப்பி விடுவது - ஓட்டத்திலிருந்து மாற்றியமைப்பது - இதுவே பிரத்தியாகாரா.

தாரணா: 

தன் விருப்பம் போல ஏதோ ஒரு பொருள் மீது, செயல் மீது, நினைவின் மீது மனத்தை நிறுத்தி வைக்க பழகுவது (Focussing attention on one thing at will) இதை 'Concentration' என்று கூறுவார்கள். இது தான் தாரணா.

தியானம்:

இந்த மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ, அது புறப்படுகின்ற இடத்திலேயே மனத்தை கொண்டு வந்து நிலை நிறுத்த பழகுவது  என்பது தான் தியானம். நம்முடைய உயிராற்றல் தான் மனம். உயிர் சக்தியினுடைய படர்க்கை நிலை தான் மனமாக இருக்கின்றது. இந்த உடலில் உயிர் இயங்கும் போது, அதிலிருந்து ஒரு அலை வீச்சு உண்டாகிறது, அலையின் மூலமாக புலன்கள் வழியே சென்று உயிரே மனமாக இயங்கி கொண்டிருக்கிறது. அந்த மனத்தை அந்த உயிர் மேலேயே லயிக்க செய்வது தான் தியானம் ஆகும்.

சமாதி: 

எல்லாவற்றிற்கும் மேலான மெய்ப்பொருளோடு மனத்தை ஒன்ற வைத்து தானும் அதுவாகவே மாறி விடுகின்ற ஒரு நிலையை தான் 'சமாதி' என்று சொல்லுவார்கள்.

இவ்வாறு  பிரத்தியாகாரா, தாரணா, தியானம், சமாதி என்ற இந்நான்கு பயிற்சிகளையும் முற்காலத்திலே மனப்பயிற்சியாக ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
எல்லா  உயிர்களும் இன்புற்று வாழ்க!

Sunday, December 9, 2018

மனம்

மனம் உருவானதற்கு இரண்டு அடுக்கு வினை பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன.

மேல் அடுக்கு பதிவு:

              பிறந்தது முதற்கொண்டு இன்று வரையில் என்னென்ன செய்தோமோ, என்னென்ன அனுபவித்தோமோ, என்னென்ன நினைத்தோமோ, என்னென்ன தீர்மானித்தோமோ, இவை அனைத்தும் பதிவாகி  இருக்கின்றன.

கருவமைப்பு பதிவு:

               கருவமைப்பு பதிவு என்பது, பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய வினைப்பயன்கள், அவர்களுக்கு முன்னோர்கள், அவர்களுக்கும் முன்னோர்கள் என்று நம் கருத்தொடர் வழியாக பின்னோக்கி சென்றோமானால் முதன் முதலில் ஒரு மனிதன் உலகத்தில் தோன்றினானே, அன்று முதற்கொண்டு நம் பெற்றோர்கள் வரையில் எங்கேயும் இடை விடாத தொடராக கருவமைப்பின் மூலம் வந்து கொண்டே இருப்பதை பார்க்கின்றோம்.

மனம் எனக் குறிப்பிடுவது இரண்டடுக்கு வினை பதிவுகளால் ஆன ஒரு தத்துவம். இந்த கருவமைப்பு பதிவு சஞ்சித கர்மம் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகி இருக்கின்றன.

வாழ்க வளமுடன்!


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

Thursday, June 21, 2018

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு


உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு என்ற முறையிலே நோய் வராமல் காக்க வேண்டுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.  நமது உடலில் ஐந்து அடுக்குகள் இருக்கின்றன என்பதை  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு  தொடரியக்கம்,  நட்பு,  உறவு சீராக இருக்கும். இவை  மூன்றில் ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்தில் குழப்பம் அடைந்தாலும்  அந்த இடத்தில் அணு அடுக்கு சீர் குலைவு ஏற்படும். அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகிறது. அளவுக்கு மேலாக காந்த சக்தி மின்சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின் குறுக்கு உண்டாகும்.  அது  தான் வலி.

மின்குறுக்கு காலத்தால் நீடித்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாக செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாக குறைக்குமானால்  அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். அதனால் உயிர்சக்தி குறைவுபட்டு, விந்து நாளத்தை தகர்த்தெறிந்துவிட்டு, உடைத்துக் கொண்டு  வெளியேறிய பின்னர் அதை தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே  மரணம்.

ரத்த ஓட்டத்தில் குழப்பம் வருவதற்கு புளிப்பு முக்கிய காரணம். குடலில் இருக்கக்கூடிய உபரியான புளிப்பு ரத்தத்திற்கு வந்து சேரும். நரம்புகள் பாதிக்கப்படும். இரசாயன அம்சத்தில் இருக்கக்கூடிய புளிப்பு வெறும் காற்றாக நரம்பிலே புகுந்து விடும். நரம்பிலே காற்று போகக் கூடாது. அந்த இடம் சுரணையற்று போகிறது. அதனால் எப்பொழுதும் வயிற்றை போட்டு நிரப்பி கொண்டே இருக்க கூடாது.

உயிர்சக்தியானது 
  1. உணவிலிருந்து ஒரு பகுதி, 
  2. காற்றிலிருந்து இன்னொரு பகுதி, 
  3. கோள்களிலிருந்து வரக்கூடிய அலைகளாக ஒரு பகுதி, 
  4. பூமியின் நடு மையத்திலிருந்து அணுக்கள் உடைகிற போது அதிலிருந்து தெறிக்கக்கூடிய அந்த துகள்களிலிருந்து ஒரு பகுதி.
 ஆக நான்கு வகையிலே நம் உடலில் உள்ள சிற்றறைகள் நமக்கு தேவையான உயிர்சக்தியை அவ்வப்போது தேவையான அளவுக்கு ஏற்று கொள்ளும். இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான கனம் உண்டு. அறிவுக்கும் உடலுக்கும் உகந்த விதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும். உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்து விட்டால் மற்ற மூன்று வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். உடல் தானாகவே காற்றிலிருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். அப்பொழுது தான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும்.

Saturday, June 16, 2018

வேதாத்திரி மஹரிஷியின் வீட்டில் செல்வம் கொழிக்கும் தனாஹர்சன சங்கல்பம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தனாஹர்சன சங்கல்பத்தை குரு ஹோரை, சுக்கிர ஹோரை அல்லது பிரம்ம முகூர்த்த வேளையில் 108
முறை சொல்லும் போது வீட்டில் செல்வம்  கொழிக்கும். பௌர்ணமி நாளில் சொல்வது சிறப்பை தரும்.
விளக்கு ஏற்றி அலங்கரித்து, அவரவர்கள் வசதிக்கேற்ப பிரசாதம் தயார் செய்துக்கொண்டு சொல்லவும்.
வடக்கு திசையில் அமர்ந்துக்கொண்டு, வடதிசை நோக்கி விளக்கு ஏற்றி அலங்கரித்து சொல்லவும்.

அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம்,  நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ வேண்டும்.

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!