மனம் உருவானதற்கு இரண்டு அடுக்கு வினை பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன.
மேல் அடுக்கு பதிவு:
பிறந்தது முதற்கொண்டு இன்று வரையில் என்னென்ன செய்தோமோ, என்னென்ன அனுபவித்தோமோ, என்னென்ன நினைத்தோமோ, என்னென்ன தீர்மானித்தோமோ, இவை அனைத்தும் பதிவாகி இருக்கின்றன.
கருவமைப்பு பதிவு:
கருவமைப்பு பதிவு என்பது, பெற்றோர்களை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய வினைப்பயன்கள், அவர்களுக்கு முன்னோர்கள், அவர்களுக்கும் முன்னோர்கள் என்று நம் கருத்தொடர் வழியாக பின்னோக்கி சென்றோமானால் முதன் முதலில் ஒரு மனிதன் உலகத்தில் தோன்றினானே, அன்று முதற்கொண்டு நம் பெற்றோர்கள் வரையில் எங்கேயும் இடை விடாத தொடராக கருவமைப்பின் மூலம் வந்து கொண்டே இருப்பதை பார்க்கின்றோம்.
மனம் எனக் குறிப்பிடுவது இரண்டடுக்கு வினை பதிவுகளால் ஆன ஒரு தத்துவம். இந்த கருவமைப்பு பதிவு சஞ்சித கர்மம் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மனிதனுடைய தன்மையாக உருவாகி இருக்கின்றன.
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
No comments:
Post a Comment