Followers
Wednesday, June 27, 2018
Thursday, June 21, 2018
உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு
உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு
உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு என்ற முறையிலே நோய் வராமல் காக்க வேண்டுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். நமது உடலில் ஐந்து அடுக்குகள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். இவை மூன்றில் ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்தில் குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அணு அடுக்கு சீர் குலைவு ஏற்படும். அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகிறது. அளவுக்கு மேலாக காந்த சக்தி மின்சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின் குறுக்கு உண்டாகும். அது தான் வலி.
மின்குறுக்கு காலத்தால் நீடித்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாக செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாக குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். அதனால் உயிர்சக்தி குறைவுபட்டு, விந்து நாளத்தை தகர்த்தெறிந்துவிட்டு, உடைத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அதை தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே மரணம்.
ரத்த ஓட்டத்தில் குழப்பம் வருவதற்கு புளிப்பு முக்கிய காரணம். குடலில் இருக்கக்கூடிய உபரியான புளிப்பு ரத்தத்திற்கு வந்து சேரும். நரம்புகள் பாதிக்கப்படும். இரசாயன அம்சத்தில் இருக்கக்கூடிய புளிப்பு வெறும் காற்றாக நரம்பிலே புகுந்து விடும். நரம்பிலே காற்று போகக் கூடாது. அந்த இடம் சுரணையற்று போகிறது. அதனால் எப்பொழுதும் வயிற்றை போட்டு நிரப்பி கொண்டே இருக்க கூடாது.
உயிர்சக்தியானது
- உணவிலிருந்து ஒரு பகுதி,
- காற்றிலிருந்து இன்னொரு பகுதி,
- கோள்களிலிருந்து வரக்கூடிய அலைகளாக ஒரு பகுதி,
- பூமியின் நடு மையத்திலிருந்து அணுக்கள் உடைகிற போது அதிலிருந்து தெறிக்கக்கூடிய அந்த துகள்களிலிருந்து ஒரு பகுதி.
Saturday, June 16, 2018
வேதாத்திரி மஹரிஷியின் வீட்டில் செல்வம் கொழிக்கும் தனாஹர்சன சங்கல்பம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
தனாஹர்சன சங்கல்பத்தை குரு ஹோரை, சுக்கிர ஹோரை அல்லது பிரம்ம முகூர்த்த வேளையில் 108
முறை சொல்லும் போது வீட்டில் செல்வம் கொழிக்கும். பௌர்ணமி நாளில் சொல்வது சிறப்பை தரும்.
விளக்கு ஏற்றி அலங்கரித்து, அவரவர்கள் வசதிக்கேற்ப பிரசாதம் தயார் செய்துக்கொண்டு சொல்லவும்.
வடக்கு திசையில் அமர்ந்துக்கொண்டு, வடதிசை நோக்கி விளக்கு ஏற்றி அலங்கரித்து சொல்லவும்.
அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
முறை சொல்லும் போது வீட்டில் செல்வம் கொழிக்கும். பௌர்ணமி நாளில் சொல்வது சிறப்பை தரும்.
விளக்கு ஏற்றி அலங்கரித்து, அவரவர்கள் வசதிக்கேற்ப பிரசாதம் தயார் செய்துக்கொண்டு சொல்லவும்.
வடக்கு திசையில் அமர்ந்துக்கொண்டு, வடதிசை நோக்கி விளக்கு ஏற்றி அலங்கரித்து சொல்லவும்.
அருட்பேராற்றல் கருணையினால் அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
Subscribe to:
Posts (Atom)