அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சி
உயிரையும், உயிரைப்பற்றிய மறைபொருளான நுட்பங்களையும் அறிந்து விளக்கக்கூடிய கல்வி. வேதாத்திரி மகரிஷி அனுபவத்தில் பயனாய்க் கண்ட விளைவுகளை உலகெங்கும் உள்ள மக்கள் வாழ்வில் நற்பயன் விளைவிக்க வேண்டி காயகல்பக் கலை என்ற பெருநிதியை வேண்டுவோருக்கு வெளிப்படையாக அறிவித்தும், பயிற்சி அளித்தும் வருகிறார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், இளமை நோன்பு காக்கும் ஆண், பெண் அனைவருக்கும், இல்லறத்தார்க்கும் பெரு நன்மை பயக்கத்தக்கது. மனிதகுல வாழ்க்கையில் நிலவி வரும் பெரும்பாலான சிக்கல்களை தீர்க்கவல்லது இந்த காயகல்ப பயிற்சி முறை ஆகும்.
இப்பயிற்சி பெறுவோர் அருளும், பொருளும் ஒருங்கேபெற்று உடல்நலம், மனவளம், அறிவுநலம் ஓங்கிச் சிறப்பாக வாழ்வீர்களாக.
வாழ்க வளமுடன்!
உலக நலத் தொண்டன்,
வேதாத்திரி